/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்து பகுதிகளில் போலீசார் நியமிக்க கோரிக்கை
/
விபத்து பகுதிகளில் போலீசார் நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 06:26 AM

புதுச்சேரி : விபத்து பகுதிகளை கண்டறிந்து, போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தினை சரி செய்ய வேண்டுமென வழக்கறிஞர் சசிபாலன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஊசுடு ஏரிக்கரை சாலையில் நேற்று முன்தினம் 2 பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளதால், விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
ஆகையால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் அலுவலக வேலை நேரங்களில் காலை மற்றும் மாலை இருவேளையிலும் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை முழுமையாக தடை செய்திட வேண்டும்.
மேலும், விபத்து பகுதிகளை கண்டறிந்துஅவ்விடங்களில் போதுமான போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தினை சரி செய்ய வேண்டும். அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து, மக்கள் பாதுகாப்பினை உறுதிபடுத்திட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.