/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
/
சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
சென்டாக்கில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்க கோரிக்கை
ADDED : மே 30, 2025 05:30 AM
புதுச்சேரி: நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு சென்டாக்கில் விண்ணப்பிக்கும் காலக் கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வர் மற்றும் சென்டாக் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனு:
மாநிலத்தில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக்கில் இணைய வழியாக கடந்த 12ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான காலக்கெடு நாளை 31ம் தேதியுடன் முடிகிறது. பெரும்பாலான மாணவர்கள் ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் பெற முடியாத நிலை உள்ளது. காரணம், தற்பொழுது தாய் வழி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.
ஆனால் புதுச்சேரி அரசு அதற்கான அரசாணை இதுவரை வெளியிடாததால், வருவாய் துறை அதிகாரிகள் அதற்கான சான்றிதழ்கள் தர தமாதப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் சான்றிதழ்கள் உரிய காலத்தில் பெற முடியாத நிலை உள்ளது.
எனவே, சென்டாக் விண்ணப்பிக்கும் தேதியை வரும் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
தாய் வழியில் ஜாதி சான்றிதழ் வழங்குவது தாமதப்படுத்தினால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் நீதிமன்றம் செல்லக்கூடும். இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு வெளியிடப்படும் தரவரிசை பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். அதனை தவிர்க்க, சென்டாக்கில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.