தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜர் கல்வி நிதியை உடனடியாக வழங்க கோரிக்கை

 காமராஜர் கல்வி நிதியை உடனடியாக வழங்க கோரிக்கை

 காமராஜர் கல்வி நிதியை உடனடியாக வழங்க கோரிக்கை


ADDED : ஜூலை 09, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜர் கல்வி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என புதுச்சேரி மாநில சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

புதுச்சேரியில் அரசு உயர் கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு,காமராஜர் கல்வி நிதி உதவி அளிக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல், 2025ம் ஆண்டுவரை அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு 2022, 2023ம் ஆண்டுகளில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும், தேர்தலுக்கு முந்தைய மாதம் கல்வி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாணவர்களுக்கு இதுவரை நிதி உதவி வழங்கப்படவில்லை.

இதனால், ஏழை மாணவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி கடன் அடைக்க முடியாத அவல நிலையில் உள்ளனர். தற்போது, 2022 ஆண்டு முதல் 2025 ஆண்டுவரை சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கல்வி கட்ணத்தை கட்ட கல்லுாரி நிர்வாகம் நெருக்கடி கொடுக்கிறது. எனவே, காமராஜர் கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும். மேலும், கல்வி கட்டண குழுவை உடனடியாக கூட்டி இந்த 2026--27ம் ஆண்டுக்கான கட்டணத்தை அறிவிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us