/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
/
நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
ADDED : டிச 05, 2024 06:38 AM
புதுச்சேரி: வெள்ள நிவாரண தொகையை, உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கு எக்டர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு, விவசாயி ஒருங்கிணைப்பு குழு சார்பில் நன்றி தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் தலைமையில், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர், சந்தித்தனர்.
அதில், விவசாய பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதால், அறிவிக்கப்பட்ட தொகையை விட, கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். சவுக்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.