தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை

 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை

 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை


ADDED : மார் 02, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மின் வாரியத்தில் கட்டுமானப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 16 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணி ஆணை வழங்க, முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத் தலைவர் மோகன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், புதுச்சேரி மின் வாரியத்தில் கட்டுமான பணியாளர் இடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் மொத்தம் 140 பேர் தகுதி பெற்றனர். இதில், 124 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 16 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும் இதுவரை பணி ஆணை வழங்காமல் இருக்கிறது.

தேர்வு முடிந்து 4 மாதங்களாகியும், கவர்னர் ஒப்புதலுக்காக 16 வீரர்கள் காத்திருந்து, வேலை இன்றி தவித்து வருகின்றனர். ​கவர்னர் மற்றும் முதல்வர் நடவடிக்கை எடுத்து விடுபட்ட 16 முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் பணி ஆணை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us