/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறைச்சி கடைகளை மறைவான இடங்களில் வைக்க கோரிக்கை
/
இறைச்சி கடைகளை மறைவான இடங்களில் வைக்க கோரிக்கை
ADDED : அக் 22, 2025 06:38 AM

புதுச்சேரி: இறைச்சிக்காக சாலையோரங்களில் ஆடு, மாடு, கோழிகள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, முதலியார்பேட்டை வள்ளலார் சபை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;
ஆடு, மாடு, கோழிகளை மறைவாக வைத்து வெட்டச் சொல்லுவது ஒன்றும் அரசிற்கு சிரமம் இல்லை. சாலையோரங்களில் ஆடு, மாடு, கோழிகள் வெட்டுவதை அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் பார்க்காத வகையில் மறைவான இடத்தில் வைத்து வெட்ட வேண்டும்.
சாலையோரங்களில் வெட்டுவதும் புதுச்சேரியில் கொலைகள் அதிகமாக நடக்க காரணமாக அமைகிறது. கொலை குற்ற செயல்களில் ஈடுபடும் அனைவரும் கொலைகளை பார்த்து வளர்ந்தவர்கள், பழக்கப்பட்டவர்கள் தான்.
அதனால் தான் கொலையை சர்வ சாதாரணமாக செய்கின்றனர்.
எனவே இறைச்சிக்காக ஆடு, மாடு, கோழிகளை சாலையோரங்களில் வெட்டுவதை அனுமதிக்காமல் சற்று மறைவான இடங்களில் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தீபாவளியை முன்னிட்டு இதற்கான உத்தரவு உழவர்கரை நகராட்சி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டது.
இது வரவேற்கதக்கதாக இருந்தாலும், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கடைபிடிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது; இது கண்டனத்திற்கு உரியது.
எனவே மாநில அளவில் இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், கவர்னரும் முதல்வரும் உத்தரவிட்டு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.