/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
/
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : ஏப் 10, 2025 04:16 AM
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி அறிக்கை:
புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணி நிரந்தரம் கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பி.ஆர்.டி.சி., பொது மேலாளர் நேரு எம்.எல்.ஏ., முன்னிலையில், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக உறுதி அளித்தார்.
ஆனாலும், நிர்வாகம், ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல், இழுத்தடிப்பு செய்கிறது. இந்நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பி.ஆர்.டி.சி., நிர்வாகம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை அழைத்து பேசாமல், தொழிலாளர் விரோத மனப்பான்மையுடன், தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுப்பது நியாயமானது அல்ல.
முதல்வர் உடனடியாக தலையிட்டு, பி.ஆர்.டி.சி., ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்களை பணி நிரந்தர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.