sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நேரு எம்.எல்.ஏ., முதல்வரிடம் கோரிக்கை

நேரு எம்.எல்.ஏ., முதல்வரிடம் கோரிக்கை

நேரு எம்.எல்.ஏ., முதல்வரிடம் கோரிக்கை


ADDED : ஜன 13, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 07:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கக்கோரி நேரு எம்.எல்.ஏ., முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வந்து செல்வதை அரசு உறுதிபடுத்த வேண்டும். ஆனால், அதற்கான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் அரசும், அதிகாரிகளும் மேற்கொள்வது இல்லை.

இதனால், புதுச்சேரி கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடலில் இறங்குவோர்களை தடுக்கவும், மீறி குளிப்பவர்கள் கடலில் இழுத்து செல்லும் போது, அவர்களை உடனே காப்பாற்றுவதற்கு நீச்சல் தெரிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 31ம் தேதி கடலில் மூழ்கி இறந்த 4 மாணவ, மாணவியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்று கொண்ட, முதல்வர் ரங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us