/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நினைவு சின்னங்களை முன்னிறுத்த கோரிக்கை
/
நினைவு சின்னங்களை முன்னிறுத்த கோரிக்கை
ADDED : ஜன 25, 2026 04:29 AM
புதுச்சேரி: குடியரசு தினவிழாவில் புதுச்சேரி அலங்கார வண்டி அணி வகுப்பில் மாண்பினை பிரதிபலிக்கும் நினைவு சின்னங்களை முன்னிறுத்த இராதே அறக்கட்டளை நிறுவனர் தேவதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்த அறிக்கை:
ஆண்டுதோறும் டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் மரபு, மாண்பை எடுத்துரைக்கும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடக்கும்.
அந்த வகையில் இந்தாண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அலங்கார வண்டி அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில், புதுச்சேரியின் மாண்பினையும், பெருமையையும் உயர்த்தும் வகையில் அலங்கார வண்டியினை வடிவமைக்க வேண்டும்.
புதுச்சேரியில் வாழ்ந்த ஆளுமை நிறைந்த கவிஞர்கள், விடுதலை வீரர்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை நமது அலங்கார வண்டிகளில் முன்னிலைப்படுத்த வேண்டும். மாறாக, புதுச்சேரிக்கு தொடர்பில்லாதவற்றை முன்னிலைப்படுத்தி புதுச்சேரியின் மரபை சிதைத்திடும் வகையில், அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

