தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நியமன எம்.எல்.ஏ., பதவிகளை பெண்களுக்கு வழங்க கோரிக்கை

 நியமன எம்.எல்.ஏ., பதவிகளை பெண்களுக்கு வழங்க கோரிக்கை

 நியமன எம்.எல்.ஏ., பதவிகளை பெண்களுக்கு வழங்க கோரிக்கை


ADDED : மே 20, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ., பதவிகளை பெண்களுக்கு வழங்க வேண்டுமென நேரு எம்.எல்.ஏ., அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை

சட்டசபை தேர்தல் முடிந்து 2 வாரங்களாகிய நிலையில், மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று கொண்டனர். ஆனால், புதுச்சேரியில் ஆட்சியாளர்களின் அதிகார போட்டியால் இதுவரையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று கொள்ள முடியவில்லை.

புதிதாக பொறுப்பேற்ற அரசின் முதல்வர், அமைச்சர்கள், தற்காலிக சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா பல கட்டங்களாக நடப்பதால், வரி பணம் பல லட்சம் செலவு செய்யப்படுகிறது. இதை தவிர்க்க ஒரே நேரத்தில் பதவியேற்பு நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

அரசு அமைச்சர்களை தவணை முறையில் நியமிக்காமல் அனைத்து அமைச்சர் பதவிகளையும் உடனே நிரப்பி அவர்களுக்கு இலாக்காக்களை அறிவித்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை ஆளும் கட்சிக்கு அலங்கார பதவியாக அளிக்காமல், ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய நிபுணத்துவம் கொண்ட வல்லுநர்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, தற்போது சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.,க்கள் இல்லா த நிலையில், பெண்களுக்கு பதவி அளிக்க முன்வர வேண்டும்.

புதுச்சேரியில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் போது லஞ்ச ஒழிப்புக்கான உறுதிமொழிகளை கட்டாயம் எடுக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்கும் அரசு ஆண்டுதோறும் சட்டசபை கூட்டத்தொடரை குறைந்தபட்சம் 40 நாட்கள் நடத்தி வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us