/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் உதவித் தொகை பொங்கலுக்கு வழங்க கோரிக்கை
/
மகளிர் உதவித் தொகை பொங்கலுக்கு வழங்க கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 05:41 AM
காரைக்கால்: புதுச்சேரியில் மகளிர்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாயை பொங்கலுக்கு வழங்க வேண்டும் என, தி.மு.க., எம்.எல்.ஏ., நாஜிம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி;
புதுச்சேரி மாநிலத்தில் மாதம்தோறும் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மாதம் 20தேதிக்கு மேல் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
தற்போது தைபொங்கல் பண்டிகை நெருங்கிறது.
எனவே, மகளிர் உதவித் தொகையை பொங்கல் பண்டிகைக்கு முன் மகளிர் வங்கி கணக்கில் செலுத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் மகளிர் தங்களுக்கு தேவையான பொங்கல் பொருட்களை வாங்கிக் கொள்வர். மேலும் அதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இலவச புடவை, கைலி வழங்குவதற்கு பதில் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். நாக தியாகராஜன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

