ADDED : ஜன 09, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விடுமுறை நாளில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வில்லியனுாரில், வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்தனர்.
அவரிடம், 'புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல்லை, பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலையை முழுமையாக வழங்க வேண்டும், என கோரிக்கை வைத்தனர். இது குறித்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

