/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலச்சங்க விண்ணப்பத்தை எளிமைப்படுத்த கோரிக்கை
/
நலச்சங்க விண்ணப்பத்தை எளிமைப்படுத்த கோரிக்கை
ADDED : அக் 16, 2025 11:32 PM
பாகூர்: விவசாய தொழிலாளர் கள் நலச்சங்க உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை எளிதாக்க அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, புதுச்சேரி மாநில குழு செயலாளர் தமிழ்செல்வன், வேளாண் துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு;
அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார் பில், விவசாய தொழிலாளர் களுக்கு நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது, அரசு சார்பில், விவசாய தொழிலாளர்களுக்கு நல சங்கம் செயல்படுத்த விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 19வது கேள்வி தொழிலாளர்கள் வேலை செய்யும் நில உரிமையாளர், விவசாயி பெயர், முகவரி, சாகுபடி பரப்பளவு, எத்தனை ஆணடாக தொழிலாளி வேலை செய்கிறார் என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொறுத்தமற்ற கேள்விகளை, விண்ணப்பத்தில் தவிர்த்து மாற்றம் செய்து, தொழிலாளர்களை அலைக்கழிக்காமல், படிவத்தை எளிமையாக பூர்த்தி செய்து பெற்று, நல சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.