/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு மைதானம் அமைச்சரிடம் கோரிக்கை
/
விளையாட்டு மைதானம் அமைச்சரிடம் கோரிக்கை
ADDED : அக் 07, 2024 10:57 PM

திருக்கனுார்: கொடாத்துார், மணவெளி பகுதியில் மினி விளையாட்டு மைதானம் அமைத்துதர வேண்டுமென அமைச்சர் நமச்சிவாயத்திடம், அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
கொடாத்துார், மணவெளிபகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து, கிராமத்தில் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் வாலிபால் விளையாட்டிற்கான, சிறிய அளவில் மினி விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.
அதற்கான இடம் கொடாத்துார் ஏரிக்கரை அருகே உள்ளதாகவும், அதனை பார்வையிட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், கொம்யூன் ஆணையர் எழில் ராஜனை அழைத்து,இளைஞர்கள் தெரிவித்த இடத்தை உடனடியாக பார்வையிட்டு,விளையாட்டு மைதானம் அமைக்க பணிகளை துவங்க உத்தரவிட்டார்.