/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு
/
சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு
சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு
சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு
ADDED : அக் 19, 2024 11:41 PM
புதுச்சேரி, : நகரப் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி நிறுவனத்தினர் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, எச்.எம். காசிம் சாலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிவதாக சமூக நலத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
துறை இயக்குனர் ராகினி, சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி நிறுவனர் மோகனிடம், அப்பெண்ணை பாதுகாக்கும்படி அறிவுறுத்தினார். சமூக நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி, சாரோன் சொசைட்டி நிறுவனர் மோகன், புஷ்பகாந்தி முதியோர் அரவணைப்பு இல்ல நிர்வாகி சுகுணா, ஸ்மைல் திட்ட மேலாளர் ராஜ்குமார், ஷோபனா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, அப்பெண்ணை மீட்டு கோரிமேடு, உழவர்கரை நகராட்சியின் கீழ் இயங்கும் நகர்ப்புற வீடு அற்றவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் சாரோன் சொசைட்டி நிறுவனர் மோகன், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள பெண் தன்னைப் பற்றிய முழு விவரத்தை சொல்ல முடியாத நிலையில் உள்ளார். எனவே, அப்பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 98434 83718 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என கூறியுள்ளார்.