/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரியில் கோவில் கலசம் மீட்பு காரைக்காலில் பரபரப்பு
/
ஏரியில் கோவில் கலசம் மீட்பு காரைக்காலில் பரபரப்பு
ADDED : அக் 14, 2024 08:01 AM

காரைக்கால் : காரைக்கால் ஏரியில் மீன்பிடி வலையில் கோவில் கலசம் சிக்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால், திருப்பட்டினம், போலகம், புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க வலை வீசியிருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மீன்பிடி வலையை கரைக்கு எடுத்து வந்து பார்த்தபோது, அதில் ஒன்னரை அடி உயரம் உள்ள ஒரு செம்பு கோவில் கலசம் சிக்கி இருந்தது தெரியவந்தது.
பின், கோவில் கலசத்தை நேற்று திருப்பட்டினம் காவல் நிலையத்தில் ஆரோக்கியதாஸ் ஒப்படைத்தார். ஏரியில் கிடைத்த கலசத்தை எஸ்.பி.,சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் பால் ஆகியோர் பார்வையிட்டனர்.
இது எந்த கோவில் கலசம், திருடப்பட்டதா என, பல கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுக்குறித்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து, கோவில் கலசம் பற்றி தகவல் தெரிந்தால் திருப்பட்டினம் காவல் நிலையத்தை 04368-233480, 9489205326 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.