/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை
/
சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை
சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை
சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை
ADDED : செப் 27, 2025 02:09 AM
புதுச்சேரி :புதுச்சேரி சுதந்திர பொன் விழா நகரில், சுத்தமான குடிநீர் வழங்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க தலைவர் எட்வர்டு சார்லஸ் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் கடந்த சில மாதங்களாக தரமில்லாத குடிநீர் வருகிறது.
இங்கு உப்பு கலந்த குடிநீர் வழங்கப்படுவதால் நகர் மக்களின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. நகர் மக்கள் தரமில்லாத குடிநீரால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு சுதந்திர பொன்விழா நகர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.