ADDED : செப் 13, 2026 08:14 PM
புதுச்சேரி, செப். 14–
புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நடந்த லோக் அதாலத்தில், 2,239 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.8.69 கோடிக்கு நிதி இழப்பீடு சமரசம் செய்யப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகே மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகங்களில், லோக் அதாலத் நடைபெற்றது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 15 அமர்வுகளும், சட்டப் பணிகள் ஆணையத்தில் ஒரு அமர்வும் அமைக்கப்பட்டன.
இதனை புதுச்சேரி தலைமை நீதிபதியுமான ஆனந்த், மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய செயலர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
இதுதவிர, காரைக்காலில் 6 அமர்வுகள், மாகேவில் ஒரு அமர்வு, ஏனாமில் ஒரு அமர்வு என மாநிலம் முழுவதும் மொத்தம் 24 அமர்வுகள் செயல்பட்டன.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் நீதிமன்றத்துக்கு வராத நேரடிப் புகார்கள் என மொத்தம் 4,445 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதில், 2,156 நிலுவை வழக்குகள் உட்பட மொத்தம் 2,239 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.8,69,93,982 மதிப்பிலான தொகைக்குச் சமரசம் செய்யப்பட்டது.
இத்தகவலை புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா தெரிவித்துள்ளார்.
