ADDED : ஆக 24, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குரும்பாபேட்டில் உள்ள வளம்மீட்பு பூங்கா 18.20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மேலும், அனைத்து கிராமங்களிலும், ஆழ்துளை குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் நிலையை கணக்கீடு செய்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலமாக தரமான குடிநீர் வழங்கப்படும்.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மின்னணு ஆளுமை மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் திறன் மேலும் வலுப்படுத்தப்படும்.
