ADDED : ஜூலை 31, 2025 03:14 AM

புதுச்சேரி: தியாகிகள் தினத்தையொட்டி, தொழிற் சங்கத்தினர், ஊர்வலமாக சென்று தியாகிகள் சிலைக்கு மரியா தை செலுத்தினர்.
தியாகிகள் தினத்தையொட்டி, தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று, கடலுார் சாலை, கோர்ட்அருகே உள்ள தியாகிகள் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலாளர் மூர்த்தி, தலைமை தாங்கினார். சங்க தலைவர் அபிேஷகம் முன்னிலை வகித்தார். தியாகிகள் கொடியை, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதனும், ஏ.ஐ.டி.யூ.சி., கொடியை சங்க மூத்த நிர்வாகி, கன்னியப்பன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இந்திய கம்யூ., மாநில செயலா ளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி., தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலாளர் சேதுசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தொழிற் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

