/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோபாரை தொடர்ந்து 'ஹவுஸ் பார்' திட்டம் மாஜி முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
/
ரெஸ்டோபாரை தொடர்ந்து 'ஹவுஸ் பார்' திட்டம் மாஜி முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
ரெஸ்டோபாரை தொடர்ந்து 'ஹவுஸ் பார்' திட்டம் மாஜி முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
ரெஸ்டோபாரை தொடர்ந்து 'ஹவுஸ் பார்' திட்டம் மாஜி முதல்வர் நாராயணசாமி 'திடுக்'
ADDED : அக் 16, 2024 04:23 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை தொடர்ந்து ஹவுஸ் பார் திட்டத்தை அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் தான் முதல்வர் பேரிடர் துறையின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில், சப் கலெக்டர் ஜான்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட என்.ஆர்.காங்., பிரமுகர் ஆனந்த் கைது செய்யப்படவில்லை. அவரை முதல்வர் காப்பாற்ற முயல்கிறார். இவ்வழக்கை, பாரபட்சமின்றி விசாரித்து, நில பதிவை ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்னையில் கவர்னர் தலையிட வேண்டும்.
கவர்னரின் அனுமதி பெறாமல், புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரூ. 60 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டது.
இதுகுறித்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சட்டசபையில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கவர்னர் அனுமதி பெறாமல், கொள்கை முடிவுக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க முதல்வர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்.
புதுச்சேரியில் ஏற்கனவே ரெஸ்டோபார்களால் கலாசார சீரழிவு ஏற்பட்டு, சட்ட, ஒழுங்கு பிரச்னை கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி, ஹவுஸ் பார் என்ற திட்டத்தை கொண்டு வர முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.இத்திட்டத்தில் வீடுகளிலேயே மது விற்பனை செய்யலாம். மேலும், வார விடுமுறை நாட்களில் 'டிட் பிட்ஸ்' என்ற புதிய வகை பாருக்கும் அனுமதி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியை மதுச்சேரியாக மாற்றிய முதல்வரை மக்கள் துாக்கியெறியும் காலம் வெகு துாரத்தில்இல்லை என்றார்.