/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கட்டுப்பாடு
/
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கட்டுப்பாடு
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கட்டுப்பாடு
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கட்டுப்பாடு
ADDED : ஜன 23, 2026 05:12 AM
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை;
அனைத்து பள்ளிக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வித் துறையின் பணிகள் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய, ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டும்.
குடியரசுத் தினம், பொதுத் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின் தேர்வுகள் நடக்கும் காலகட்டங்களில், ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். உண்மையான அவசர நிலைகள் ஏற்பட்டால் மட்டும், தகுந்த அதிகாரிகளின் முன் அனுமதி பெற்ற பிறகே விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.