/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதான் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதான் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதான் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதான் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 02, 2024 05:39 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவையின் 16ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்தார்.
சனாதன தர்மமான நம் இந்து தர்மத்தின் மிகப்பெரிய பலமே பக்திதான்.பக்தியே மனித வாழ்வின் தலையாய கடமை. அந்தக் கடமையை சரியாக செய்பவரே, மற்ற எல்லாக் கடமைகளையும் ஒழுங்காக செய்யமுடியும்.
யார் வேண்டுமானாலும் பகவானிடத்தில் பக்தி செய்யமுடியும். பக்தி செய்வதற்கு மனம்தான் வேண்டும். மனம் சரியான பாதையில் சென்றால் வாழ்க்கை மிக நன்றாகவேயிருக்கும்.
உலகில் விலை நிர்ணயம் செய்ய முடியாத பொருள் மனித மனமே ஆகும்.மனதை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் ரகசியம் இந்து தர்மத்திற்கு மட்டுமே தெரியும். ஆசை, கோபம், சுயநலம் என்கின்ற மூன்று திருடர்கள் நம்முடைய ஞானம் என்னும் ரத்தினத்தை அபகரிக்கின்றார்கள். ஆதலால் எப்பொழுதும் இந்த மூன்று திருடர்களிடமும் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதனால்ஞானத்தை யாரும் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை.
தன்னிடத்திலிருக்கும் ஆசை, கோபம், சுயநலம் ஆகியவற்றை கொன்றொழித்தாலே போதும். ஆசை, கோபம், சுயநலம் ஆகியவை அசுர குணங்கள்.இந்த அசுரர்களை வதம் செய்தாலே நிம்மதி பிறக்கும்.
உலகில் மிக மிக சுலபமான ஒரேயொரு காரியம் அது. ஜாதி, மதம், மொழி, இனம், பணம், அந்தஸ்து, வயது, படிப்பு, ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்று அனைத்தையும் கடந்து, எல்லோராலும் செய்ய முடியும் ஒரு காரியம் உண்டு. அது எந்த ஒரு விஷயத்தாலும் பாதிக்கப்படாத சமத்துவத்திற்கு சான்றான ஒரு காரியம் இறைவனிடம் சரணாகதி மட்டுமே.
ஆகவே, நல்லதை வாசித்து, தேவைகளை யோசித்து, உணர்வுகளை சுவாசித்து கனவுகளை யாசித்து, கண்ணனின் நினைவுகளை நேசித்து வாழும் வாழ்க்கை என்றும் இனிக்கும். இந்த உண்மையை 16-வது திருப்பாவையின் பாசுரம் காட்டுவதை உணர்ந்து உய்வோம்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

