/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற ஊழியர் கீழே விழுந்து சாவு
/
ஓய்வு பெற்ற ஊழியர் கீழே விழுந்து சாவு
ADDED : ஜன 22, 2024 12:51 AM
அரியாங்குப்பம் : ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர் வீட்டில் கீழே விழுந்து இறந்தார்.
முதலியார்பேட்டை, உப்பளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் அருணகிரி, 64. இவர், புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்து விட்டார்.
மகன்கள் இருந்தும் தனியாக வீட்டில் இருந்து வந்த இவர் நெஞ்சு வலி, வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் அவரது மகள் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது, அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்து கிடந்தார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, முதலியார் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.