ADDED : ஜூன் 02, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இருவருக்கு, துறை இயக்குநர் இளங்கோவன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையல் கலைஞர்களாக பணியாற்றிய அலமேலு, பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் பங்கேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
இதில், நலத்துறையின் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், பட்டாபிராமன், விடுதி காப்பாளர்கள் ராஜா, அருள்தாஸ் மற்றும் விடுதி ஊழியர்கள், மாணவர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டுனர்.