ADDED : ஜூன் 04, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அரசு மருத்துவமனையில் செவிலியர் அதிகாரியாக, பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரியாக பணிபுரிந்தவர் தமிழரசி.
இவர், 36 ஆண்டுகள், பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பாராட்டு விழா, மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கருத்தரங்கு அறையில் நடந்தது.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியோ தலைமை தாங்கினார். துணை செவிலியர் கண்காணிப்பாளர்கள் விஜயா, இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்,டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, செவிலியர் அதிகாரியின் சேவையை பாராட்டினர்.