/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கமிட்டி வளாகத்தில் பொருட்காட்சி நடத்திய நிறுவனம் காலி செய்யாததால் வருவாய் இழப்பு
/
கமிட்டி வளாகத்தில் பொருட்காட்சி நடத்திய நிறுவனம் காலி செய்யாததால் வருவாய் இழப்பு
கமிட்டி வளாகத்தில் பொருட்காட்சி நடத்திய நிறுவனம் காலி செய்யாததால் வருவாய் இழப்பு
கமிட்டி வளாகத்தில் பொருட்காட்சி நடத்திய நிறுவனம் காலி செய்யாததால் வருவாய் இழப்பு
ADDED : பிப் 12, 2025 03:33 AM
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பொருட்காட்சி நடத்திய தனியார் நிறுவனம், காலக்கெடு முடிந்து இடத்தை காலி செய்து தராததால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் மார்க்கெட் கமிட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மணிலா, உளுந்து, காராமணி, நெல், திணை உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள இடங்கள் தனியார் நிறுவனங்கள் பொருட்காட்சி நடத்தி கொள்ள அனுமதி அளித்து, அதன் மூலம் வரும் வாடகை வருவாயை கொண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று பொருட்காட்சி நடத்த அனுமதி பெற்று நடத்தி வந்தது. அந்த நிறுவனத்திற்கான காலக்கெடு கடந்த ஜன., 26ம் தேதியுடன் முடிவடைந்தது.
ஆனால், பொருட்காட்சி நடத்திய தனியார் நிறுவனம், இதுவரையில் அந்த இடத்தை காலி செய்து கொடுக்கவில்லை. இதனால், மற்ற தனியார் நிறுவனங்கள் ஏதுவும் தங்களது நிகழ்ச்சி நடத்தி கொள்ள முன்வரவில்லை. இதன் காரணமாக, மார்க்கெட் கமிட்டிக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மார்க்கெட் கமிட்டியில் பொருட்காட்சி நடத்திய தனியார் நிறுவனம் உடனடியாக அப்பகுதியை காலி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை எழுத்துள்ளது.

