/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் துறைமுகம் மூலம் ரூ.12.86 கோடி வருவாய் முதல்வர் ரங்கசாமி தகவல்
/
காரைக்கால் துறைமுகம் மூலம் ரூ.12.86 கோடி வருவாய் முதல்வர் ரங்கசாமி தகவல்
காரைக்கால் துறைமுகம் மூலம் ரூ.12.86 கோடி வருவாய் முதல்வர் ரங்கசாமி தகவல்
காரைக்கால் துறைமுகம் மூலம் ரூ.12.86 கோடி வருவாய் முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : பிப் 17, 2024 05:05 AM
புதுச்சேரி, : காரைக்கால் துறைமுக திட்டத்தின் மூலம் இந்த நிதியாண்டில் இதுவரை 12.86 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி அரசு காரைக்கால் துறைமுகத்திட்டத்தை அறிவித்த பிறகு அப்பணியை கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் என்ற அடிப்படையில் அனைத்து பருவங்களிலும் இயங்கும் ஓர் ஆழ்கடல் -துறைமுகமாக உருவாக்க தனியார் அபிவிருத்தியாளருடன் சலுகை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது.
தற்போது காரைக்கால் துறைமுகத்தில் உள்ள 5 கடற்தளங்கள் மூலம் ஆண்டுக்கு 16.5 மில்லி யன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறனுடன் இயங்கி வருகிறது.
இத்துறைமுகத்தில் பல்வேறு வகை நிலக்கரிகள், சுண்ணாம்புக்கல், உரம், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய், இரும்பு சாதனங்கள் போன்ற பொருட்கள் கையாளப்படுகின்றன. 2009ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 98.42 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இந்த காலக்கட்டத்தில் புதுச்சேரி அரசுக்கு சலுகைக் கட்டணமாகவும், நில குத்தகைத் தொகையாகவும் கிடைத்த வருவாய் ரூ. 114.61 கோடியாகும். 2023-24ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சலுகைக் கட்டணமாக வும், நில குத்தகைத் தொகையாகவும் பெறப்பட்ட ரூ. 5.04 கோடிக்கான காசோலையை சேர்த்து இந்த நிதியாண்டில் இதுவரை துறைமுகத்துறைக்கு ரூ. 12.86 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது போன்ற திட்டங்களின் மூலம் ஈட்டப்படும் வருவாயானது அரசின் வரவு செலவு திட்டத்திற்கு உதவும் ஒரு கூடுதல் நிதி ஆதாரமாக உள்ளது.