/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
/
சபாநாயகர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
ADDED : ஏப் 09, 2025 03:40 AM

புதுச்சேரி: மணவெளி தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சட்டசபை சபாநாயகர் அலுவலகத்தில் நடந்தது.
சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் குலோத்துங்கன், தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள் சவுந்தரராஜன், ராதாகிருஷ்ணன்,அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் சுரேஷ், இளநிலை பொறியாளர் அகிலன் உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அபிஷேகப்பாக்கம், என்.ஆர்.நகர் வழியாக சுண்ணாம்பாற்றில் 19 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளத் தடுப்பு சுவர் கட்டும் பணி உள்ளிட்ட மணவெளி தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள 51.56 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை விரைந்து துவங்கி, முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும், பணிகள் துவங்குவதற்கு அரசாணை பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், தன்னிடம் தெரிவித்தால், முதல்வர், அமைச்சர், செயலரிடம் தானே நேரில் சென்று அரசாணை பெற்று தருவதாக தெரிவித்தார்.

