/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோரியாங்குப்பத்தில் ஆற்றுத் திருவிழா
/
சோரியாங்குப்பத்தில் ஆற்றுத் திருவிழா
ADDED : ஜன 20, 2024 05:58 AM

பாகூர் : சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா நடந்தது.
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில், பொங்கல் பண்டிகையின் 5வது நாளாக நேற்று ஆற்றுத் திருவிழா நடந்தது. இதில், பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம், சேலியமேடு, அரங்கனுார், நிர்ணயப்பட்டு, இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம், மேல்அழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகளுக்கு தீர்த்த வாரி நடந்தது. பின், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தெற்கு சரக எஸ்.பி., தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.