/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
களிஞ்சிக்குப்பத்தில் ஆற்றுத்திருவிழா
/
களிஞ்சிக்குப்பத்தில் ஆற்றுத்திருவிழா
ADDED : ஜன 19, 2025 05:49 AM
நெட்டப்பாக்கம்: களிஞ்சிக்குப்பம் தெண் பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா கோலகலமாக நடந்தது.
களிஞ்சிக்குப்பம் தென் பெண்ணையாற்றில் தை திங்கள் 5ம் நாள் ஆற்று திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையின் 5ம் நாளான நேற்று ஆற்றுத்திருவிழா என்படும் தீர்த்தவாரி விழா நடந்தது.
இதில் பண்டசோழநல்லுார், மடுகரை, கல்மண்டபம், கரியமாணிக்கம், வடுக்குப்பம், கரையாம்புத்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிக்கு கொண்டு வரப்பட்டன. பெண்ணையாற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தாவரி நடந்தது.
கரையாம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்று வழிப்பட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாகூர்
சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில், ஆற்றுத் திருவிழா நேற்று நடந்தது.
இதில், பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம், சேலியமேடு, அரங்கனுார், நிர்ணயப்பட்டு, இருளஞ்சந்தை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

