/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுக்குப்பம் கிராமத்தில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
/
புதுக்குப்பம் கிராமத்தில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
புதுக்குப்பம் கிராமத்தில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
புதுக்குப்பம் கிராமத்தில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கம்
ADDED : நவ 10, 2025 11:20 PM

அரியாங்குப்பம்: புதுக்குப்பம் கிராமத்தில், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 48.92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொறுப்பு) நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி உட்பட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, கடலுார் சாலையில், பொதுப்பணித்துறை மூலம், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நோணாங்குப்பம் முதல் அரியாங்குப்பம் சிக்னல் வரை, தடுப்பு சுவர் உயரமாக அமைக்கும் பணியை சபாநாயகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.