/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பிணிக்கு சிகிச்சை குறைபாடால் 2 குழந்தைகள் இறப்பு தனியார் மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல்
/
கர்ப்பிணிக்கு சிகிச்சை குறைபாடால் 2 குழந்தைகள் இறப்பு தனியார் மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல்
கர்ப்பிணிக்கு சிகிச்சை குறைபாடால் 2 குழந்தைகள் இறப்பு தனியார் மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல்
கர்ப்பிணிக்கு சிகிச்சை குறைபாடால் 2 குழந்தைகள் இறப்பு தனியார் மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல்
ADDED : ஜூலை 02, 2025 07:28 AM
புதுச்சேரி : கர்ப்பிணிக்கு சிகிச்சை குறைபாட்டால் 2 குழந்தைகள் இறந்ததாக கூறி, தனியார் மருத்துவனையை எம்.எல்.ஏ., தலைமையில் பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத், 34; டிரைவர். இவரது மனைவி சுமதி, 33; குழந்தை பேறுக்காக புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட்டியூப் முறையில் சுமதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண், பெண் என 2 சிசுக்கள் கருதரித்துள்ளது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஐந்தரை மாத கர்ப்பிணியாக இருந்த சுமதிக்கு திடீரென பனிக் குடம் உடைந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6ம் தேதி மேற்கண்ட மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவரை, அறுவை சிகிச்சைக்காக ரெட்டியார் பாளையத்தில் உள்ள மருத்துவமனையின் இன்னொரு கிளையில் சேர்த்துள்ளனர். அங்கு கடந்த மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிசிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆண் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட் டதாகவும், பெண் குழந்தையை பிறக்க வைப்பதற்கான வசதி இங்கு இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளனர்.
அதையடுத்து கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் சுமதியை கணவர் சேர்த்துள்ளார். அங்கு சேர்த்த மறு நாள் 21ம் தேதி காலையில், வயிற்றில் ஏற்கனவே இறந்த ஆண்குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இன்னொரு பெண் குழந்தையும் இறந்து பிறந்துள்ளது. தொடர்ந்து சுமதிக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட் டுள்ளார்.
பாதிக்கப் பட்ட கணவர் பிரசாத் மற்றும் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமையில் காலை இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாலை இந்திராகாந்தி சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். ரெட்டியார்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையொட்டி சாலை மறியல் கைவிடப்பட்டது.