/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை தொகுதியில் சாலை அமைக்கும் பணி
/
முத்தியால்பேட்டை தொகுதியில் சாலை அமைக்கும் பணி
ADDED : டிச 29, 2025 05:43 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் ரூ.96 லட்சத்தில் வாய்க்காலுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பிராகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதி திருவள்ளுவர் நகர், பாரதி வீதி, ஆனந்தா இன் முதல் துலுக்கானத்தம்மன் கோவில் வரை 76 லட்சம் ரூபாய் மதிப்பில் வாய்காலுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ரூ.20 லட்சம் மதிப்பில் திருவள்ளுவர் நகர் செட்டிகுளம் வீதிக்கு கழிவுநீர் வாய்க்கால் உடன் கூடிய புதிய சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணியை அவர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா, இளநிலைப் பொறியாளர் சிவசுப்பிரமணியம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், மேலான் இயக்குனர் ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கார்த்திக், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், உறுப்பினர்கள், துலுக்கானத்தம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

