
திருபுவனை : திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தால்குப்பத்தில் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.38.52 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தொடங்கி வைத்தார்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் சுகுமார் நகர், வி.கே நகர், நகர் மற்றும் பிள்ளையார் கோயில் தெரு ஆகிய உட்புறச் சாலைகளுக்கு பொதுப்பணித்துறையின் சார்பில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் சாலைகள் (வடக்கு) கோட் ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனுவாசராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஓம் பிரனாவ் சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.