
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் 1.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை, அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.
சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இ.சி.ஆர்., சாலை முதல் சின்ன இருசாம்பாளையம் வரை, 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு 1 .73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, அரியாங்குப்பம் அம்பேத்கர் நகரில் நேற்று நடந்தது.
அமைச்சர் லட்சுமிநாராயணன் பணியை, துவக்கி வைத்தார். பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் நடராஜன், இளநிலை பொறியாளர் கார்த்திக், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

