
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: ஊசுடேரியில் இருந்து பொறையூர் செல்லும் சாலை அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்டம் சார்பில், ரூ. 51.49 லட்சம் திட்ட மதிப்பில் ஊசுட்டேரி கன்னியம்மன் கோவில் முதல் ஆதித்யா பள்ளி வரை உள்ள பொறையூர் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல்.
உளவாய்க்கால் முதல் கோனேரிக்குப்பம் வழியாக செல்லும் சன்னியாசிகுப்பம் வரை தார்சாலை அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
சாலைகள் மற்றும் கட்டடங்கள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவி பொறியாளர் ஜலில், இளநிலை பொறியாளர் தேவர் உட்பட பலர் பங்கேற்றனர்.

