/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்பாட்டு பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
சாலை மேம்பாட்டு பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 21, 2025 07:54 AM

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சி சார்பில் , ராஜ்பவன் தொகுதி தியாகராஜ வீதி, மிஷன் வீதி முதுல் பெத்ரோ கனகராய முதலியார் வீதி வரை உள்ள சாலையை சிமென்ட் சாலையாக, தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதேபோல் குமரகுருபள்ளம், ஆயில் மில் சாலையை ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.
இப்பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற் பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் பழனிராஜா, இளநிலைப் பொறியாளர் சுரேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.