தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : ஜூன் 19, 2025 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 11:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் பேட்டில், 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணியை, அமைச்சர் சாய் சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பாகூர் பேட்டில் அம்பேத்கர் நினைவு வளைவில் இருந்து நீர்த்தேக்க தொட்டி வரை உள்ள 570 மீட்டர் நீளம் சிமென்ட் சாலையை, 1 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பொதுப்பணித்துறை மூலம் மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவில், அமைச்சர் சாய் சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து வைத்து பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் மாறன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us