/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெட்டியார்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ரெட்டியார்பாளையத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஆக 06, 2025 11:34 PM

புதுச்சேரி:வில்லியனுார் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருவதால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், வில்லியனுார் மெயின் ரோடு, இந்திரா சதுக்கம் முதல் அரும்பார்த்தபுரம் வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவுறுத்தலின் பேரில், இளநிலைப் பொறியாளர்கள் சிவக்குமார், சேகர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதில், சாலை ஆக்கிரமிப்பு கடைகள், அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன், கிரேடு சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.