/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவிலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
கன்னியக்கோவிலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 31, 2024 05:50 AM
பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் கன்னியக்கோவில் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.
புதுச்சேரி - கடலுார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முள்ளோடை முதல் கன்னியக்கோவில் வரையில் நேற்று பாகூர் தாசில்தார் கோபாலக் கிருஷ்ணன் தலைமையில், கமிஷனர் சதாசிவம், பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதில், சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பெயர் பலகை கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலமாக அகற்றப்பட்டது. தொடர்ந்து, மீண்டும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் கன்னியக்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.