/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை விபத்தில் பெண் பலி இழப்பீடு கேட்டு சாலை மறியல்
/
சாலை விபத்தில் பெண் பலி இழப்பீடு கேட்டு சாலை மறியல்
சாலை விபத்தில் பெண் பலி இழப்பீடு கேட்டு சாலை மறியல்
சாலை விபத்தில் பெண் பலி இழப்பீடு கேட்டு சாலை மறியல்
ADDED : பிப் 21, 2025 04:39 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டை சாலை விபத்தில் இறந்த பெண் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராதிகா, 42. ஒரு மகன், மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன், மனைவியை பிரிந்து சென்றுவிட்டார்.
ராதிகா, கடலுார் சாலை, முதலியார்பேட்டையில் டிபன் கடை நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி இரவு சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலியார்பேட்டை, விடுதலை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடலுார் சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்து இறந்த ராதிகா குடும்பத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், சம்பத் எம்.எல்.ஏ., விபத்து ஏற்படுத்திய கார் எது என விசாரித்து வருகிறோம். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்று, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.