sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அமைச்சர் தொகுதியில் பொதுமக்கள் செலவில் சாலை சீரமைப்பு

/

 அமைச்சர் தொகுதியில் பொதுமக்கள் செலவில் சாலை சீரமைப்பு

 அமைச்சர் தொகுதியில் பொதுமக்கள் செலவில் சாலை சீரமைப்பு

 அமைச்சர் தொகுதியில் பொதுமக்கள் செலவில் சாலை சீரமைப்பு


ADDED : ஜன 06, 2026 04:16 AM

Google News

ADDED : ஜன 06, 2026 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அமைச்சர் ஜான் குமாரின் தொகுதியான காமராஜர் நகரில் சேதமடைந்த பாலாஜி நகர் மெயின் ரோட்டை சொந்த செலவில் அப்பகுதி மக்கள் சீரமைத்து வருகின்றனர்.

புதுச்சேரி சாரம் 40 அடி ரோடு அருகில் உள்ள பாலாஜி நகர் மெயின் ரோடு, கவிக்குயில் நகர், வேலன் நகர், சின்னையம்பேட், கிருஷ்ணா நகர், திருமுடி சேதுராமன் நகர் உள்ளிட்ட பல நகர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. பல நகர்களுக்கு செல்லும் சாலையாக இருந்த பாலாஜி மெயின் ரோடு,குறுக்கு சாலைகள், சைடு வாய்க்கால்,பாதாள சாக்கடை உள்ளிட்டவை சேதம் அடைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். சாலை சேதமடைந்தது குறித்து பலமுறை பொதுப்பணித்துறை, நகராட்சி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவித்தும் பல ஆண்டுகளாக சாலை சரி செய்யப்படாமல் அப்படியே இருந்து வந்தது இதனால் எரிச்சல் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மசூதி நிர்வாகிகள் ஒன்று கூடி சேதம் அடைந்த சிமென்ட் சாலையை பொதுமக்கள் செலவில் சாலையை கடந்த மூன்று நாட்களாக சீரமைத்து வருகின்றனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டாம் விரைவில் பூஜை செய்து சாலை போடும் பணியை துவங்க உள்ளோம் என பொதுமக்களிடம் கூறினர். ஆனால் சீரமைப்பை பணியை பொதுமக்கள் முழுமையாக செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us