/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 1.8 கோடியில் சாலை சீரமைப்பு பணி
/
ரூ. 1.8 கோடியில் சாலை சீரமைப்பு பணி
ADDED : ஜன 10, 2026 05:32 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில், 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு மற்றும் அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் தொகுதி, முருங்காப்பாக்கம் அங்காளம்மன் நகர், அவிந்தர் நகர் ஆகிய இடங்களில் சாலை சீரமைக்க, பொதுப்பணித்துறை சார்பில், 40.13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவிப்பொறியாளர் ரமேஷ்குமார், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி, உதவிப்பொறியாளர் நாகராஜ், என்.ஆர்.காங்., பிரமுகர் சந்திரமோகன், மகாலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, வரதராசு நகர், துரைசாமி நகர், சிவசக்தி நகர் ஆகிய பகுதிகளில், 39.38 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மேலும், அரியாங்குப்பம் சண்முகா நகரில், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, அவரின் மேம்பாட்டு நிதியின் மூலம், 28.47 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம் கட்டும், பணி துவக்கப்பட்டது.

