/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 10, 2026 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுதேசி மில் அருகில் ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கு, 8 வது ஊதியக்குழு பரிந்துரைகள் வழங்கும் வகையில் வரம்பு குறிப்பை மீண்டும் மாற்றியமைத்திட கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சண்முகம், கலியமூர்த்தி, ராமகிருஷ்ணன், சிவகுமார், அன்பழகன், ராதாகிருஷ்ணன், கணேசன், விஸ்வநாதன், ஆனந்தகணபதி, ராமச்சந்திரன், சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

