/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 29, 2024 11:28 PM

புதுச்சேரி: காலாப்பட்டு எம்.ஓ.ஹச் பாரூக் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் சாந்தாதேவி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வசந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார்.
புதுச்சேரி மாவட்ட சமுதாய நலப்பணித் திட்ட இயக்குனர் மதிவாணன், போக்குவரத்து துறையின் புதுமை பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சாலை விதிகள், மாணவர்கள் எவ்வாறு சாலைகளை கடக்க வேண்டும் என பேசினர்.
ஆசிரியை மாலதி தொகுத்து வழங்கினார். இதில், மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
சமுதாய நலப்பணி திட்ட ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

