/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 13, 2025 11:49 PM

திருக்கனுார் : சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னதாக, சாலை விதிகள் குறித்தும், அதனை சரியாக கடைப்பிடித்தால், தேவையற்ற சாலை விபத்துகளை தவிர்க்கலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் டி.வி.மலை சாலை, வடக்கு தெரு மற்றும் பிள்ளையார் கோவில் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதில், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் மாணவர்களின் நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செய்திருந்தனர்.