தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 


ADDED : செப் 16, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலை பள்ளி சார்பில், குப்பைகள் அகற்றுதல் மற்றம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை, பள்ளி தாளாளர் பட்டாபிராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் தர்மசம்வர்தனி முன்னிலை வகித்தார். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் துவங்கி காந்தி வீதி, நீடராஜப்பர் வீதி, மிஷன் வீதி, ரங்கப் பிள்ளை வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் குப்பையை பிரி, சரியாக அகற்று; புதுச்சேரியை துாய்மையாக வைத்திரு வாசகங்கள் அடங்கிய பாததைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து  மாணவர்களின் வண்ண குறியீடு கொண்ட குப்பை தொட்டிகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து தெருமுனை நாடகம் நடந்தது. ஊர்வலத்தை ஆசிரியர் தெய்வநாயகி, உடற்கல்வி ஆசிரியர் பிரதாப் சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us