ADDED : செப் 16, 2026 08:32 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாவரவியல் துறை சார்பில், உலக ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாவரவியல் துறைத் தலைவர் பிஜய குமார் நாயக் வரவேற்றார். நிறுவனத்தின் இயக்குநர் சசி காந்த தாஸ் தலைமை தாங்கி, இயற்கையை பாதுகாப்பது, இயற்கையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவது குறித்தும் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மதன்ஜீத் சிங் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் முகமது ஜாபர் அலி, ஓசோனின் முக்கியத்துவம், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 50 சதவீத எரிசக்தி தேவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படும்’ என்றார்..
ஓசோனின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாவரவியல் துறையின் முதுகலை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், கட்டுரை, விவாதம், பேச்சு மற்றும் முழக்கம் எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி கோதைஸ்ரீ நன்றி கூறினார்.
