ADDED : செப் 16, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: முருங்கம்பாக்கம் ராமானுஜ பஜனை மடத்தில் 22ம் ஆண்டு விழா நாளை மறுநாள் 19ம் தேதி நடக்கிறது.
முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 22ம் ஆண்டு விழாவையொட்டி, நாளை மறுநாள் 19ம் தேதி காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் பஜனை நடக்கிறது. தொடர்ந்து, 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது.
:
